நொறுக்குத்தீனி, குத்தாட்டம்: களை கட்டிய அதிமுகவின் உண்ணாவிரத போராட்டம்

செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (16:40 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க தவறியதை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை அதிமுக அறிவித்திருந்தது. முதல்வர், துணை முதல்வர் உள்பட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஒருசில இடங்களில் உண்ணாவிரத போராட்டமாக இல்லாமல் மனமகிழ் மன்றம் போல் இருந்துள்ளது. போரடிக்காமல் இருக்க எம்ஜிஆர் பாடல் உள்பட பல பாடல்களை இசைப்பது, அதற்கு8 குத்தாட்டம் ஆடுவது என அதிமுக தொண்டர்கள் ஜாலியாக உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தனர்.

அதுமட்டுமின்றி உண்ணாவிரதம் இருந்த தொண்டர்களுக்கு வேர்கடலை, முறுக்கு, சமோசா என தின்பண்டங்களும் ஒருசில இடங்களில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காவிரி பிரச்சனை என்பது தமிழக மக்களின் உயிர்நாடியான விஷயம் என்ற நிலையில் இந்த பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருப்பவர்கள், உண்ணாவிரத நிகழ்ச்சியையே கேலிக்கூத்தாக்கிவிட்டதாக சமூக வலைத்தள பயனாளிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்