உணர்வு இருந்தால் அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யட்டும் - தமிழிசை
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (11:38 IST)
உண்மையாகவே உணர்வு இருந்தால் அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யட்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதிமுக சார்ப்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு கடையடைப்பு போரட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி திமுக சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்கலை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
காவிரி விவகராத்தில் ராஜினாமா செய்வோம் என்று கூறினார். உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள், தமிழக உரிமையை பாஜக நிச்சயம் பெற்று தரும். உண்மையாகவே உணர்வு இருந்தால் ராஜினாமா செய்ய வேண்டியதுதானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.