தங்க கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமின்

செவ்வாய், 2 நவம்பர் 2021 (14:14 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் உலுக்கியது என்பதும், இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணை இன்று நடைபெற்றது 
 
இன்றைய விசாரணையில் ஸ்வப்னாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக உலுக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து இந்த வழக்கில் மேலும் சில திருப்பங்கள் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
கேரளா அரசியலையே உலுக்கிய இந்த தங்க கடத்தல் விவகாரத்தின் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்