ஓவியாவை தத்தெடுக்கப் போகிறோம் - பாடகி சின்மயி அதிரடி

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (14:38 IST)
நடிகை ஓவியாவை தத்தெடுக்க முடிவு செய்திருப்பதாக, பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள ஓவியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் அவருக்குதான் அதிக ஓட்டுகள் விழுந்து வருகிறது. 
 
அந்நிலையில், கடந்த 21ம் தேதி வெளியான புரோமோ வீடியோவில், நடிகை ஓவியா, மற்ற அனைவரும் சேர்ந்து அழ வைத்தனர். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அவருக்கு ஆதரவாக ஓவியா ரசிகர்கள் களம் இறங்கினர். அவர்கள் காயத்ரி மற்றும் ஜூலிக்கு எதிராக கருத்துகளையும், மீம்ஸ்களையும் அள்ளி தெளித்தனர்.
 
இந்நிலையில், பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் “என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் அப்செட்டில் இருக்கிறார்கள். யாருடா எங்க ஓவியா பாப்பாவை அழ வச்சது. நாங்கள் ஓவியா பாப்பாவை தத்தெடுக்க விரும்புகிறோம். அதற்கான விதிமுறைகளை கூறுங்கள்” எனக் விளையாட்டாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தந்தையை இழந்த ஓவியா, சென்ற வருடம் புற்றுநோய் காரணமாக தனது தாயையும் இழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்