முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் மருத்துவர்கள் சிகிச்சை!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2016 (08:49 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 28-ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்து வருவதாக மருத்துவமனை வட்டார செய்திகள் கூறுகின்றன.


 
 
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நுரையீரல் தொற்று இருப்பதாகவும் செயற்கை சுவாசம் அளித்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
 
முதல்வருக்கு லண்டன், எயிம்ஸ், அப்பல்லோ மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். அவர்களின் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவருவதால் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் மவுண்ட் எலிசபத் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் அப்பல்லோ வந்துள்ளனர்.
 
முதல்வருக்கு அளித்த மருத்துவ சிகிச்சைகள் பலனளித்தநிலையில் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையளிக்க 2 சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவர்கள் சென்னை அப்பல்லோ வந்து மூன்றாவது நாளாக சிகிச்சையளித்து வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்