கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் முன்னாள் முதல்வர் சித்ராமையா, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்ராமையா வருணா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு தொகுதியிலும் போட்டியிட தான் மேல் இடத்தில் அனுமதி கேட்டு இருப்பதாகவும் குறித்து மேலிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்