ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி; தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் தர சோதனை! – அமைச்சர் அதிரடி உத்தரவு!

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (09:38 IST)
நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில் மாநிலம் முழுவதும் உணவகங்களில் சோதனை செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.நாமக்கல் பகுதியில் உள்ள பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் 14 வயது சிறுமி சவர்மா சாப்பிட்ட நிலையில் அவர் திடீரென வாந்தி மயக்கம் எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும் அவர் சிகிச்சையின் பலன் இன்றி காலமானார். 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் உணவக உரிமையாளர் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அருகே அமைந்துள்ள சிற்றுண்டி கடைகள், துரித உணவகங்களில் ஆய்வு செய்ய முக்கியத்துவம் அளிக்குமாறும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. தரமற்ற உணவுகளை விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்