பதவியை ராஜினாமா செய்யுங்கள் அமித்ஷா – ட்விட்டரில் வலுக்கும் குரல்கள்!

செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (11:09 IST)
டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

நேற்று டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வந்தது. அப்போது குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு கோஷ்டியினருக்கும், எதிர்ப்பு கோஷ்டியினருக்கும் இடையே மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்த கலவரத்தை போலீஸார் அடக்க முயன்றபோது போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்லை வீசி தாக்கியதில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலைகளில் இருந்த வாகனங்களை கொளுத்தியும், கடைகளை அடித்து உடைத்தும் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவத்தால் 5 பேர் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவிட, அதை தொடர்ந்து மேலும் பலர் அதே ஹேஷ்டேகில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வன்முறை சம்பவத்தை தொடர்ந்து டெல்லியின் முக்கியப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்