முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆளும் தரப்பினால் கட்டம் கட்டப்படுவதாக தகவல்கள் வருகின்றன. அவர் மீதான பழைய புகார்களை தமிழக காவல்துறை தூசி தட்ட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி விரைவில் கைதாக இருக்கிறார் எனவும், குண்டர் சட்டம் பாய இருக்கிறது எனவும் தகவல்கள் வருகின்றன.
செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமன ஆணை தருவதாகக் கூறி 6 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்ததாக இவர்மீது புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் ஆட்டத்தை அடக்க அவர் மீதான மோசடி புகார்களை கையிலெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இது தற்போது விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடு உட்பட அவர் தொடர்புள்ள அனைத்து இடத்திலும் வருமான வரித்துறையினர் போனதாக கூறப்படுகிறது. தற்போது செந்தில் பாலாஜி மீது 408, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.