இந்த வழக்கில் பல்வேறு தரப்பினர்களுக்காக வாதாட வட இந்தியாவில் உள்ள பிரபலமான வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். இதனால் நேற்று நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இதில் திமுக சார்பில் வாதாட கபில் சிப்பல், தினகரன் தரப்புக்கு வாதார சல்மான் குர்ஷித் போன்ற வட இந்தியாவை சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள்.
இதனை விமர்சித்து ஏன் தமிழக வழக்கறிஞர்களை வாதாட அழைக்கவில்லை என்ற தொனியில் கிண்டலாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், திமுகவிற்கு கபில் சிப்பல், டிடிவிக்கு சல்மான் குர்ஷித், அதிமுகவிற்கு முகுல் ரோத்தகி இவர்கள் உயர் நீதிமன்றத்தில் பானி பூரி விக்க வந்தாங்களா என கிண்டலாக கேள்வி எழுப்பினர்.