இதில் ஏதோ சதி இருப்பதாகத் தெரிகிறது.. விசாரணைக்கு பின் ஹேமாமாலினி பேட்டி..!

Mahendran

செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (14:56 IST)
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, பாஜக 8 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அமைத்தது. நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தலைமையில், அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட குழுவினர் இன்று தமிழ்நாட்டிற்கு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர்கள் பேசினர்.
 
ஹேமமாலினியின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘இந்தச் சம்பவம் நடந்த பிறகு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். செப்டம்பர் 27-ல் ஒரு சோகமான விபத்து நிகழ்ந்தது. என்ன நடந்தது என்பதை பார்க்க நாங்கள் இங்கு வந்தோம். சம்பவ இடத்தை நேரில் பார்த்தோம், அது மிகவும் மோசமாக இருந்தது. உள்ளூர் மக்களும் தாங்கள் கண்டதை எங்களிடம் தெரிவித்தனர். விஜய் எந்த நேரத்தில் வந்தார், எத்தனை இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் வந்தனர் என்று அவர்கள் சொன்னார்கள். இவ்வளவு சிறிய இடத்தில் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்தது தவறு. விஜய் ஒரு பெரிய பஸ்ஸில் வந்தார். இதில் ஏதோ சதி இருப்பதாகத் தெரிகிறது.” என்று ஹேமமாலினி தெரிவித்தார்.
 
41 பேர் இறந்தது மிகவும் சோகமானது. மருத்துவமனையில் 51 பேர் இன்னும் வேதனையில் உள்ளனர். எங்கள் கேள்வி, இதற்கு யார் பொறுப்பு? கூட்டம் நடத்தும் இடத்திற்கு அனுமதி அளித்த நிர்வாகிகளும், அமைப்பாளர்களும் யார்?” என்று கேள்வி எழுப்பினார்.
 
இந்தச் சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக எம்.பி. அனுராக் தாகூர் கோரிக்கை விடுத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி மூலம் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அமைப்பாளர்கள் தரப்பில் என்னென்ன குறைபாடுகள் இருந்தன? இத்தனை உயிர்கள் போனதற்குக் காரணம் என்ன?  உளவுத் துறை என்ன செய்து கொண்டிருந்தது?” என்றும் கேள்வி எழுப்பினார்.
 
குழுவினர் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியோரைச் சந்தித்து, ஆய்வுக்குப் பிறகு தங்கள் அறிக்கையை பாஜக தலைமைக்குச் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்