45வது முறையாக செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு.. நீதிபதி அல்லி உத்தரவு

Siva

புதன், 10 ஜூலை 2024 (20:42 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி காவல் 45வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் வாதங்கள் தொடங்காத நிலையில் வரும் 12ஆம் தேதி முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

செந்தில் பாலாஜியின் வழக்கை நான்கு மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் 45 வது முறையாக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்