நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை கிடப்பில் போட்டது ஏன்? தேசிய தேர்வு முகமைக்கு பறந்த உத்தரவு..!

Senthil Velan

செவ்வாய், 9 ஜூலை 2024 (16:44 IST)
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை கிடப்பில் போட்டது ஏன் என தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது. சென்னையை சேர்ந்த சில மாணவர்கள் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி தருன்மோகன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். 
 
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர், நீட் தேர்வு மோசடி வழக்கில் மனுதாரர் சிக்கியுள்ளதாகவும், தற்போது இந்த வழக்கு விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். 
 
இந்த மோசடியில் இடைத்தரகராக மனுதாரர் செயல்பட்டு செயல்பட்டுள்ளதால், அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என வழக்கறிஞர் வாதாடினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி,  நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அமைப்பை இந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறது என தெரிவித்தார். 

ALSO READ: ஒரே மாதத்தில் 5 முறை கடித்த ஒரே பாம்பு.! உயிர் பயத்தில் வாழும் இளைஞர்..!!

இந்த வழக்கு குறித்து தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற பத்தாம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்