கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டுகளில் அதிமுகவின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து பாலாஜி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது
இந்த விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது