செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு: என்.ஆர். இளங்கோ வாதம்..!

வியாழன், 22 ஜூன் 2023 (11:53 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்து வருகிறார்.
 
மேலும் அமைச்சரின் கைது சட்டவிரோதம் இல்லை என்றால் ஆட்கொணர்வு வழக்கு தேவையில்லை ஆனால், இதில் சட்டவிரோத நடவடிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் அமைச்சரின் கைது குறித்த தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது அடிப்படை உரிமை என்றும் இதை அரசியல் சாசன பிரிவு 15 A-வில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
 
சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என நக்கீரன் கோபால் உள்ளிட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை சுட்டிக்காட்டிய அவர் நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என்று கூறினார்,
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்