அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை: காவேரி மருத்துவமனை தகவல்..!

வியாழன், 22 ஜூன் 2023 (09:24 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இன்று அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தொடர்ந்து வருவதாக காவிரி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 
 
நேற்று அசைந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் தற்போது அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை காவேரி மருத்துவமனையில் சிறப்பு தீவிஅர் சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. 
 
அறுவை சிகிச்சை முடிந்து 24 மணி நேரத்திற்கு பின்னர் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார் என்றும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு மற்றும் அமலாக்கத் துறையின் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்