மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்ல திட்டமிட்டிருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திடீரென டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், "அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து அவர்களிடம் பேசினேன். அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், அனைவரும் வலிமை பெற வேண்டும் என்ற எனது நோக்கத்தை தெரிவித்தேன்" என்று கூறினார்.
தனிப்பட்ட பயணமாக ஹரித்துவார் செல்வதாக கூறி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர்களை சந்தித்து அரசியல் குறித்து பேசியது, பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.