மனம் திறக்கப்போகும் செங்கோட்டையன்.. இன்றே வாய் திறக்கும் எடப்பாடியார்! - அதிமுகவில் காத்திருக்கும் அதிர்ச்சி!

Prasanth K

செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (15:28 IST)

அதிமுகவில் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையே முரண்பாடுகள் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில் இது அதிமுகவிற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த சில காலமாகவே அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்து வந்தது. எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்த அதிமுக கூட்டங்களில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் செங்கோட்டையன் தன்னிச்சையாக டெல்லி பயணம், நிர்மலா சீதாராமன் சந்திப்பு என தொடர்ந்ததால் அவர் பாஜகவில் இணையப் போகிறாரா என்ற கேள்விகள் எழுந்தது.

 

இந்நிலையில் தற்போது செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு வரும் 5ம் தேதி மனம் திறப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு முன்னதாக முந்திக் கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பரப்புரையில் செங்கோட்டையன் விவகாரம் குறித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்