விஜய் கூட சேர்ந்தா நல்லா இருக்கும்.. நிர்வாகிகள் விருப்பம்! - ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை!

Prasanth K

திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (14:41 IST)

ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய சந்திப்பில் தவெகவுடன் கூட்டணி அமைக்க நிர்வாகிகள் பலரும் விரும்புவதாக கூறப்படுகிறது.

 

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதலாக பாஜகவில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது பாஜகவிலிருந்து விலகியுள்ளார். தொடர்ந்து அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இருமுறை சந்தித்த நிலையில், திமுகவுடன் ஓபிஎஸ் கூட்டணியா என்று பல கேள்விகள் எழ அதையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார் ஓபிஎஸ்.

 

ஆனால் ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து விலகியதை அவரது ஆதரவாளர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். எப்படி பார்த்தாலும் பாஜக கூட்டணியில் சரியான பிரதிநிதித்துவம் ஓபிஎஸ் அணியினருக்கு கிடைத்திருக்காது என்பதால் இந்த முடிவு சரியே என்றும் ஆலோசனை கூட்டத்தில் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

 

மேலும் அடுத்த மாதம் நடத்த உள்ள மதுரை மாநாட்டிற்கான பணிகளை துரிதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய ஓபிஎஸ் சட்டமன்ற தேர்தல் குறித்த நிர்வாகிகளின் விருப்பம் குறித்தும் கேட்டாராம். அதற்கு சிலர் தவெகவுடன் கூட்டணி அமைப்பது வலுவான ஒரு கட்டமைப்புக்கு உதவும் என சிலர் விருப்பம் தெரிவித்ததாக தகவல். எனினும் இதுகுறித்து ஓபிஎஸ் மாநாட்டிற்கு பிறகே முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்