தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் 600ஆக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் பிளஸ் 2 முடித்த பின் உயர்கல்வி படிப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 11ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்றும் அது மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் 600ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் களையப்பட்டு 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு தனித்தனியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட இருக்கிறது.