கமல், ரஜினி அதிமுகவிற்கு வாங்க - செல்லூர் ராஜூ அழைப்பு

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (13:38 IST)
நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அதிமுகவிற்கு வாருங்கள் என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அழைப்பு விடுத்துள்ளார்.


 

 
தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூ ராஜு “மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என  நினைத்தால் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்” என அவர் அழைப்பு விடுத்தார்.
 
மேலும், ஓ.பி.எஸ் அணியிலிருந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு வந்துவிட்டார். மற்றவர்களும் விரைவில் வருவார்கள் என அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்