நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 1996 ஆம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக அருகில் மூப்பனாரை வைத்துக்கொண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்த ரஜினிகாந்த் அதன்பிறகு ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது துணிச்சலுடன் அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆளுமைமிக்கவர். அவர்கள் மாண்ட பின்னர் வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு வந்தேன் என்று சொல்பவர்கள் ஆளுமை மிக்கவர்கள் அல்ல என்று சீமான் ரஜினியை விமர்சித்துள்ளார்.