ரஜினி ஒரு நடிகர் மட்டுமே என்றும் அவர் அரசியல்வாதியும் இல்லை என்றும், காம்பவுண்டு சுவரில் அரசியல் செய்பவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் முதல்வர் கூறியது ரஜினி தரப்பை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரஜினி ஒரு பாஜக ஆதரவாளர் என்பதால் அவரை இதுவரை விமர்சனம் செய்யாமல் இருந்த அதிமுக தலைமை, சமீபத்தில் ரஜினிகாந்த் பாஜகவை விமர்சனம் செய்ததால் தற்போது அதிமுக தலைமை தைரியமாக ரஜினியை விமர்சனம் செய்ததாக தமிழக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது
இந்நிலையில் கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரையும் அதிமுக ஒரே நேரத்தில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதை அடுத்து இருவரும் இணைந்து அரசியல் செய்ய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் துணிந்து களத்தில் இறங்குங்கள், உங்கள் பின்னால் நான் இருக்கிறேன், இணைந்து பணி செய்வோம் என்று கமல்ஹாசன் கூறியதாகவும் ரஜினிகாந்த் அதற்கு ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. சினிமாவில் கடந்த பல வருடங்களாக இணையாத ரஜினி-கமல், அரசியலில் இணைதால் எம்ஜிஆர் பெற்ற வெற்றியை பெறுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்