நடிகர்களின் அரசியல் இனி எடுபடுமா? திருமாவளவன் பதில்

புதன், 13 நவம்பர் 2019 (06:45 IST)
நடிகர்களின் அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
நேற்று திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ’நடிகர்களின் அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது என்ற தமிழக முதல்வரின் கருத்து எனக்கும் உடன்பாடு தான். பொதுமக்கள் தற்போது அரசியல் விழிப்புணர்ச்சியுடன் இருக்கின்றார்கள். எனவே எம்ஜிஆர் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை போல் இனி எந்த நடிகர்களாலும் ஏற்படுத்த முடியாது என்றே கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.
 
முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து தமிழகத்தில் இனி நடிகர்களின் அரசியல் எடுபடாது என்று கூறியிருந்தார்.
 
முதல்வர் கூறியது ஓரளவு உண்மை என்றே கருதப்படுகிறது. எம்ஜிஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த சிவாஜி கணேசன், டி.,ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் மற்றும் சமீபத்தில் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் உள்பட இதுவரை யாரும் தமிழக அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்