மேலும் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அரசு கச்சத்தீவை திரும்ப கேட்கவில்லை என இலங்கை அமைச்சர் தொண்டைமான் கூறியதை அடுத்து தற்போது இருக்கும் பாஜக அரசும், இதற்கு முந்தைய திமுக காங்கிரஸ் அரசும் கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கச்சத்தீவை மீட்போம் என அடிக்கடி பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பாஜகவுக்கு கச்சத்தீவு ஞாபகம் வருகிறது என்றும், தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுங்கள் நாங்களே பாஜகவுக்கு வாக்களிக்கிறோம், எனக்கு வாக்களிக்கவிட்டாலும் பரவாயில்லை கச்சத்தீவை மீட்டுக் கொடுத்தால் நானே பாஜகவுக்கு வாக்களிக்கிறேன் என்றும் சீமான் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.