அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கம்யூட்டர்கள், செல்போன்களில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் சிப்களுக்கு மாற்றாக சீனா கண்டுபிடித்துள்ள சிப் தொழில்நுட்ப உலகில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நடத்தி வரும் சீனா, மின்சாதனங்களின் ப்ராசஸர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டிருந்தது. பொதுவாக கம்ப்யூட்டர், செல்போன் என அனைத்து மின் சாதங்களிலும் பயன்படுத்தப்படும் மதர்போர்டில் உள்ள ப்ராசஸர் சிப் சிலிக்கானால் செய்யப்படுகிறது. இந்த சிலிக்கான் சிப் தயாரிப்பில் அமெரிக்காவின் இண்டெல், என்விடியா உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
இந்நிலையில் சிலிக்கான் சிப்பை விட அதிவேகமாக செயல்படக்கூடிய ப்ராசஸர் சிப்பை தயாரிக்கும் முயற்சியில் இறங்கிய பேகிங் பல்கலைக்கழகம் சிலிக்கானுக்கு பதிலாக பிஸ்முத் என்ற உலோகத்தை பயன்படுத்தி புதிய சிப்பை தயாரித்துள்ளனர். இந்த புதிய சிப்பானது சிலிக்கான் சிப்பை விட 10 சதவீதம் குறைவாகவே மின்சக்தியை கோருகிறது. மேலும் சிலிக்கான் சிப்பை விட 40 சதவீதம் அதிவேக திறனை கொண்டுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சோதனை அடிப்படையில் உள்ள இந்த பிஸ்முத் சிப் கூடிய சீக்கிரம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியையே ஆட்டம் காண செய்யும் போட்டியாளராக சீனா மாறும்.
Edit by Prasanth.K