மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை 2016-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக முதல்வர் நடத்திய ஆய்வுக்கூட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.