குடும்ப அட்டை இருக்கும்போது மக்கள் ஐடி எதற்கு? சீமான் கேள்வி

சனி, 7 ஜனவரி 2023 (13:00 IST)
குடும்ப அடையாள அட்டை இருக்கும் நிலையில் மக்கள் ஐடி எதற்கு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசு ஏற்கனவே இந்தியாவில் உள்ள 95 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கி உள்ளது என்பதும் இந்த ஆதார் அட்டை குடும்ப அட்டை, வங்கி கணக்கு, எலக்ட்ரிக் எண் என அனைத்திலும் இணைக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென தமிழக அரசு மக்கள் ஐடி என்ற புதிய அடையாள அட்டையை உருவாக்க போவதாக அறிவித்துள்ளது.
 
தமிழகம் சார்ந்த திட்டங்களுக்கு இந்த மக்கள் ஐடி அவசியம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும் இது வீண் செலவு என அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. 
 
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து கூறிய போது தமிழ்நாட்டிற்கு என தனியான அடையாள அட்டை எதற்காக பயன்படும் என்பதில் தெளிவில்லை என்று தெரிவித்தார். மேலும் குடும்ப அட்டைகள் இருக்கும்போது மக்கள் ஐடி என்ற தனி அடையாள அட்டை எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்