திருச்செந்தூர் கோவிலில் சீமான் தரிசனம்.. தங்க வேல் காணிக்கையாக வழங்கினார்..!

வெள்ளி, 19 மே 2023 (19:41 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது  குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று சுவாமி தரிசனம் செய்ததோடு தங்கவேல் காணிக்கையாக வழங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
நாம் தமிழர் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்சென்றார்.
 
அவர் இரண்டடி நீளம் உள்ள தங்கவேல் காணிக்கையாக வழங்கினார். குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று வழிபட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது தமிழகத்தில் நகைகளை அடகு வைத்து கல்வி பயிலும் சூழ்நிலை நிலவுவதாகவும் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு 10 லட்சம் நிதி தருவதாக கூறியது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்