இனி எங்கள் காலம்.... சீமான் பிறந்த நாளை தெறிக்கவிடும் தம்பிகள்!!

திங்கள், 8 நவம்பர் 2021 (11:25 IST)
தமிழக அரசியல்வாதியும், தமிழ் திரைப்பட இயக்குநராகவும், தமிழ் சினிமா நடிகராகவும் விளங்கும் சீமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

 
ஆம், சீமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 8 நவம்பர் 1966 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ் திரைப்பட இயக்குநராகவும், தமிழ் சினிமா நடிகராகவும்  தன்னை அடையாளப்பட்டுத்திக்கொண்டுள்ளார். 
 
இவர் சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்துகிறார்.  நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே 10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இவர் தமிழ் தேசியம் குறித்தும் தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் எனவும் பேசி வருகிறார். 
 
இந்நிலையில் இவர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் #இனி_எங்கள்_காலம், #சீமான் மற்றும் #இனி_நாம்தமிழர்_காலம் போன்ற ஹேஷ்டேக்குகளை சமுக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்