முப்பாட்டன் முருகனை பழித்துரைப்பதா? சீறிய சீமான்!!

வெள்ளி, 17 ஜூலை 2020 (17:47 IST)
உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது என சீமான் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் கந்தகஷ்டி கவசத்தில் இடம்பெற்று ஒருசில வார்த்தைகளை ஆபாசமாக விமர்சனம் செய்தது முருகன் பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  
 
இது குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது, தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. 
 
தமிழர்களின் பெருத்தப் பண்பாட்டு அடையாளமாக இருக்கிற தமிழ் இறையோன் முருகனைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி ஒட்டுமொத்தத் தமிழர்கள் மீதும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் கல்லெறிகிற கயமைத்தனமாகும். 
 
வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்ய வேண்டிய தருணத்தில், தமிழின முன்னோர்களை இழித்துரைத்துப் பரப்புரை செய்யும் செயல்கள் கருத்துரிமை வரம்பிற்கு அப்பாற்பட்டவையாகும்.
 
முப்பாட்டன் முருகனைப் பழித்துரைத்து இழிவுசெய்யும் நோக்கோடு வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பகுத்தறிவுப் பரப்புரை எனும் பெயரில் ஆரியம் கற்பித்திருக்கிற ஆபாசக் கட்டுக்கதைகளை அருவெறுக்கத்தக்க வகையில் விமர்சனம் என்ற பெயரில் வக்கிரத்தை உமிழ்ந்து, பெருவாரியான மக்களிடம் எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்குள் மதவுணர்ச்சியை மேலிடச்செய்து மதவாத இயக்கங்கள் வேரூன்றவே திராவிட ஆதரவாளர்களின் இத்தகையச் செயல்கள் உதவுகிறதே ஒழிய, தமிழுக்கும், தமிழர்க்கும் அணுவளவும் நலன் பயக்கவில்லை. 
 
முருகனை விமர்சிக்கும் அந்நபருக்கும், தனக்கும் தொடர்பில்லை எனக்கோரி வாக்கு அரசியலுக்காக ஆரியமயமாக்கல் குறித்து திமுக வாய்திறக்க மறுத்திருப்பது பச்சை சந்தர்ப்பவாதம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்