பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (13:03 IST)
பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து, பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

 
செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து  பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இதற்கான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு வழிமுறைகள் தயாரிக்கும் பணியில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை தலைமை செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது. அதோடு தமிழக அரசு கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 30 சதவீத பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்