இடைநின்ற மாணவர்களை கணக்கெடுப்பு செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (14:13 IST)
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் இடை நின்ற மாணவர்களை கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் பல மாணவர்கள் படிப்பை நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குடும்ப வறுமை உள்பட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் வேலைக்கு சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பள்ளிகளில் 6 முதல் 18 வயதுள்ள இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு செய்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது காண நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டுமென தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆகியோர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
 
இந்த உத்தரவையடுத்து தமிழகத்தில் 6 வயது முதல் 18 வயது வரை பள்ளிக்குச் செல்லாமல் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்