கூடுவாஞ்சேரி தாங்கல் ஏரி உடைப்பு? நந்திவரம் ஏரியும் உடையும் அபாயம்....

செவ்வாய், 31 அக்டோபர் 2017 (15:48 IST)
சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கூடுவாஞ்சேரியில் உள்ள தாங்கல் ஏரி உடைந்து நீர் வெளியேற துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.




 
 
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சென்னையில் பல இடங்களில் கனமழை பொழிந்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது.
 
இந்நிலையில் கூடுவாஞ்சேரியில் உள்ள தாங்கல் ஏரி உடைந்து நீர் வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, கூடுவாஞ்சேரி ஏரி உடைந்ததால் ஊரப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் நந்திவரம் ஏரியும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடையாற்றிலும் கனமழை காரணமாக நீரின் மட்டம் அதிகரித்து வருவதால் அடையாற்றின் கரையோர மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்