மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை !!

சனி, 20 மார்ச் 2021 (15:00 IST)
தமிழகத்தில் 9,10,11 வகுப்புகளுக்கு மார்ச் 22 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என தகவல். 

 
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் மக்கள் பீதி அடைந்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து சில மாநிலங்கள் ஆலோசித்து வருகின்றன.  
 
அந்த வகையில், புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
அதன்படி 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை (மார்ச் 22 முதல் மே 31 வரை) அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் மட்டுமே இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 9,10,11 வகுப்புகளுக்கு மார்ச் 22 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என  தலைமைச் செயலர் அறிவிப்பு. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்