இதனிடையே, ஜெயலலிதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கக் கோரி, ராஜவேலு என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
ஜெயலலிதா மக்கள் பிரதிநிதி என்பதால் அவரை அரசு ஊழியராக கருதக்கூடாது என்றும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று, அந்த மனுவில் ராஜவேலு கோரிக்கை விடுத்திருந்தார்.
அப்போது, ஜெயலலிதா இறந்துவிட்டதால், மனு காலாவதியாகி விட்டது என்று கூறிய நீதிபதிகள், ராஜவேலுவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.