ஜெ. மரணம் குறித்த ரகசியத்தை உடைக்க சி.பி.ஐ. விசாரணை: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

வெள்ளி, 6 ஜனவரி 2017 (11:42 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


 

அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து அந்த மனுவில் கூறியுள்ள சசிகலா புஷ்பா, ”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து எவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உடலை பதப்படுத்தியது போன்ற அடையாளங்கள் இருந்தன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது.

எனவே அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை அல்லது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் அடிப்படை முகாந்திரம் இல்லையென எனத் தெரிவித்து, இரு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அங்கு இது தொடர்பான தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் மனுதாரர்களிடம் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்