யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த வழக்கு: இரு நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து

Siva

வெள்ளி, 24 மே 2024 (13:44 IST)
யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் இந்த மனு மீதான உத்தரவை பிற்பகலுக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதற்கு முன் இறுதி விசாரணை நடத்தலாமா என்ற விஷயத்தில் இரு நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதற்கு முன் வழக்கை இறுதி விசாரணைக்கு எடுக்க அவசியம் இல்லை என  நீதிபதி பாலாஜி தனது கருத்தை தெரிவித்த நிலையில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யாவிட்டாலும் இன்றே இறுதி விசாரணை நடத்தலாம்  நீதிபதி சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கு இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்த நிலையில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தால் என்ன திருப்பம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்