சவுக்கு சங்கர் - அண்ணாமலை இடையிலான போன் ரெக்கார்ட்.. கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

Siva

புதன், 22 மே 2024 (09:47 IST)
சவுக்கு சங்கர் மற்றும் அண்ணாமலை இடையிலான போன் பதிவுகளை ஆய்வு செய்தால் பல உண்மைகள் தெரியவரும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் பிரமுகர் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கருக்கும் அண்ணாமலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் சவுக்கு சங்கரை இயக்கியது அண்ணாமலை தான் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காண்டீபன் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

இந்த புகாரில் சவுக்கு சங்கர் மற்றும் அண்ணாமலை இடையிலான போன் உரையாடலை எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கடந்த ஒரு வருட ரெக்கார்டை எடுத்து விசாரித்தால் பல உண்மைகள் தெரியவரும் என்றும் கூறியுள்ளார். இந்த புகார் மனு குறித்து காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்