குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Mahendran

வியாழன், 23 மே 2024 (11:25 IST)
அரசியல் விமர்சகர் மற்றும் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இது குறித்து ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு திறப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார் என்பதும் பெண் காவல்துறை அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் அதன் பின் கஞ்சா வழக்கு, பெண் பத்திரிகையாளரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது உள்பட பல வழக்குகளில் கைது செய்யப்பட்டார். 
 
இதனை அடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இன்றைய விசாரணையில் யூடியூப் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அனைத்து அசல் ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை காவல் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
இந்த வழக்கு இன்று பிற்பகலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறை தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்