மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்.. வலது கையில் கட்டு இருந்ததா?

Mahendran

புதன், 8 மே 2024 (16:39 IST)
மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரது வலது கையில் கட்டு இருந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெண் காவல்துறை அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் தேனியில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அதன் பின் சிறையில் அடைக்கப்பட்டார். . 
 
இந்த நிலையில் அவர் கஞ்சா வைத்து இருந்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் அடிப்படையில் அவர் இன்று மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். 
 
பலத்த பாதுகாப்புடன் அவர் மதுரைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவரை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது அவரது வலது கையில் கட்டு இருந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சில நிமிடத்தில் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. 
 
ஏற்கனவே பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொடுத்த புகார் மற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் கஞ்சா வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்