ப்ளீஸ்.. கருணாநிதி பற்றி மீம்ஸ் போடாதீங்க - நடிகர் சதீஷ் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (16:14 IST)
திமுக தலைவர் கருணாநிதி பற்றி மீம்ஸ் போடாதீர்கள் என நடிகர் சதீஷ் கோரிக்கை வைத்துள்ளார்.

 
இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கியுள்ள ‘பூமாராங்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. 
 
இந்த விழாவில் நடிகர் சதீஷ் கலந்து கொண்டு பேசிய போது “ தற்போது உள்ள தண்ணீர் மற்றும் விவசாய பிரச்சனைகள் பற்றி இப்படத்தில் இயக்குனர் கண்ணன் பதிவு செய்துள்ளார். ஷவரில் குளிக்காமல் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளித்தால் நீரை நிறைய சேமிக்கலாம். 
 
சமூகத்தில் ஒரு பிரச்சனை எனில் ஒரு மீம் போட்டுவிட்டு நம் கடமை முடிந்து விட்டதாக கருதுகிறோம். களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அவ்வளவு பெரிய தலைவர் மருத்துவமனையில் இருக்கும் போது அவரை மற்றி மீம்ஸ்களை போடுகிறார்கள். பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவரின் வயதுக்கும், அவர் வகித்து வந்த பதவிக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். எனவே, அவரை பற்றிய மீம்ஸ்களை போடாதீர்கள். யாரேனும் அனுப்பினாலும் நீங்கள் யாருக்கும் ஷேர் செய்யாதீர்கள்” என கோரிக்கை வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்