பயணிகள் இல்லை, சிறப்பு ரயில் சேவை கட் - தெற்கு ரயில்வே அதிரடி!!

வியாழன், 19 நவம்பர் 2020 (10:17 IST)
வாரம் 6 நாள்களும் இயங்கி வந்த சதாப்தி ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு. 
 
கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் தளர்வுகள் வழங்கப்பட்டு போக்குவரத்தும் படிப்படியாக தொடங்கி வருகின்றன. ஏற்கனவே பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயங்க தொடங்கியதை அடுத்து விரைவில் புறநகர் ரயில் சேவையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
முன்னதாக தளர்வுகள் அளிக்கப்பட்டபோது தமிழக மாவட்டங்களுக்குள் பயணிகள் ரயில்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட வழிதடங்களில்  சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. அதில், சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயிலும் ஒன்று. 
 
ஆனால் தற்போது, பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் சேவை நவம்பர் 30 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவிப்பு. செவ்வாய்க் கிழமையை தவிர வாரம் 6 நாள்களும் இந்த ரயில் இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்