தேர்தலில் ஒரு தொகுதியில் இரண்டு வெவ்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் நின்றால் அது பெரும்பாலும் கவனம் ஈர்க்கும். முந்தைய தேர்தல்களை விட இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு செல்வாக்கு சற்று கூடியுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமீபத்திய பேட்டியில், திமுக மற்றும் அதிமுகவின் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது,
தமிழகத்தில் உள்ள இருபெரு கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு எதிர்காலம் வேண்டுமென்றால் திமுக காங்கிரஸையும், அதிமுக பாஜகவையும் கழற்றி விட வேண்டும். அதேசமயம் தமிழகத்திற்கும் தமிழகர்களுக்கும் எதிர்காலம் வேண்டும் என்றால் மக்கள் திமுக மற்றும் அதிமுவை கைவிட வேண்டும் என பேசியுள்ளார்.