பாஜக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை.? மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்..!!

Senthil Velan

செவ்வாய், 4 ஜூன் 2024 (17:08 IST)
மக்களவைத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகியோரை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.  பாஜக கூட்டணி 294 இடங்களிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 
 
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் தென்பட்டாலும் கூட்டணி ஆட்சியையே அமைக்க முடியும் என்ற நிலை உருவாகும் எனத் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. எனினும் பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் இடையே குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவின் இருப்பதால் ஆட்சியைக் கைப்பற்ற போவது யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
இந்நிலையில்  பாஜக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு மட்டுமன்றி நிதிஷ் குமாரையும் இந்தியா கூட்டணிக்கு இழுக்க காங்கிரஸ் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நிதீஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி வழங்க காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் பாஜகவும் கூட்டணி கட்சிகளை சிதறவிடாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

ALSO READ: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வாஸ் அவுட்.! 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி முகம்..!!
 
இதனிடையே  இன்று மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதேபோல்  பாஜக கூட்டணி சார்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 7 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருவதால், இந்திய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்