சென்னையை அடுத்து மதுரையில்..! தூய்மை பணியாளர்கள் போராட்டம்! - நெருக்கடியில் திமுக!

Prasanth K

ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (11:44 IST)

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் தூய்மை பணிகள் ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்குவதை ரத்து செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

 

சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தத்தில் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து கடலூரில் தனியார் ஒப்பந்த நிறுவனம் 3 மாதங்களாக சம்பளம் தரவில்லை என தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

 

தற்போது தூய்மை பணியாளர்கள் போராட்டம் மதுரை வரைக்கும் பரவியுள்ளது. மதுரை மாநகராட்சியில் தூய்மை பணிகளுக்கான தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை மற்றும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாளை முதல் காத்திருப்பு போராட்டம் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.

 

தொடர்ந்து ஆங்காங்கே தூய்மை பணியாளர்கள் போராட்டம் பூதாகரமாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்