கடந்த சில நாட்களாக சசிகலா தினந்தோறும் ஆடியோவை வெளியிட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சற்று முன் வெளியான இன்னொரு வீடியோவில் எம்ஜிஆரே என்னிடம் ஆலோசனை கேட்பார் என்றும் நான் சொல்லும் ஆலோசனைகளை எம்ஜிஆர் கவனத்துடன் கேட்டு கொண்டு அதன்படி நடப்பர் என்றும் கூறியுள்ளார்
மேலும் ஜெயலலிதா டென்ஷனாக இருக்கும்போது நான் தான் அவரை சமாதானப் படுத்தினேன் என்றும் கூறிய சசிகலாவை அதிமுகவில் ஜானகி, ஜெயலலிதா என பிரிந்தபோது இரண்டையும் ஒருங்கிணைத்ததில் எனக்கு தான் மிகப் பெரிய பங்கு உண்டு என்று கூறினார்