அம்மாவின் மறு உருவமே - சசிகலாவுக்கு களமிறங்கிய அதிமுக மகளிர் அணியினர்
வியாழன், 1 ஜூலை 2021 (11:01 IST)
மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக மகளிர் அணியினர் போஸ்டர் ஒட்டி இருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவிலிருந்து சசிக்கலா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையிலும் கடந்த சில நாட்களாக சசிக்கலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் தொலைபேசி வழியாக பேசி வருகிறார். தொடர்ந்து தொண்டர்களிடம் சசிக்கலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருவது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக மகளிர் அணி புறநகர் கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அம்மாவின் மறு உருவமே என்ற வாசகத்துடன் மதுரையின் சில பகுதிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.