சசிகலாவின் அரசியல் வாழ்க்கை தகர்ந்தது: ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (16:18 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுள்ள சசிகலா தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தாலும் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை உருவாகியுள்ளது.


 
 
தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுள்ள சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார், அவர் விடுதலை ஆன பின்னர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரை அமலுக்கு வந்தால் சசிகலா வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
 
இதனால் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை இத்தோடு தகர்ந்தது என கூறப்படுகிறது. மேலும் அவர் அரசியல் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பதும் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்