ரூல்ஸ் பேசிய சசி தரப்பு; குட்டு வைத்த வருமான வரித்துறை!

வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (11:24 IST)
சிறையில் உள்ள சசிகலா, வருமான வரித்துறை தன் மீது போட்டுள்ள வழக்கை திருப்ப பெற வேண்டும் என கோரியதற்கு பதில் அளித்துள்ளது  வருமான வரித்துறை தரப்பு. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் ஆகிய தண்டனை பெற்ற சசிகலா, தற்போது பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 
 
இந்நிலையில், கடந்த 1994 - 1995 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ரூ.48 லட்சம் ரூபாயை செலுத்த சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதனை வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. 
இருப்பினும், வருமான வரித்துறை 2008 ஆம் ஆண்டு இதை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காக கொண்டு சென்றது. இந்த வழக்கு இன்னும் நடைபெற்று வரும் நிலையில் சசிகலா தரப்பில் வருமான வரித்துறை இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளது.  
 
மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்த சுற்றறிக்கையில், ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு கீழ் உள்ள வருமான வரி தொடர்பான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
இதை கேட்ட வருமான வரித்துறை தரப்பு, வழக்கை திரும்பப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. வருவாய் தணிக்கை பிரிவு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்ப பெற முடியாது என்பதால் இந்த மனு பரிசலிக்கபடுமா என தெரியாது என தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்